அரச நிறுவனங்களின் தலைவர்களையும், பணிப்பாளர்களையும் பதவிவிலகுமாறு அறிவுறுத்தல்

தமது இராஜினாமா கடிதங்களை ஒப்படைக்குமாறு கூட்டுத்தாபனங்கள், சபைகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுத்தாபனங்கள், சபைகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களுக்கும் இதனை அறிவிக்குமாறு, அனைத்து அமைச்சுக்களினதும்   செயலாளர்களுக்கும் ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

சுற்றுநிரூபம் ஒன்றை விடுத்துள்ள ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை, அரச நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் உள்ளவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதியினால் ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவிகளுக்கு தகைமை வாய்ந்த தொழில் வல்லுநர்கள் தொடர்பான பரிந்துரையை அல்லது விண்ணபிக்க விரும்புவோர் 2019 டிசம்பர் 18ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பரிந்துரைகளை அல்லது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு இக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பின்வரும் முகவரி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செயலாளரின் பணியகம்
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு 01
மின்னஞ்சல் : [email protected].

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435