அரச நிறுவனங்களில் கைவிரல் அடையாள பதிவு கட்டாயம்

அரச நிறுவனங்களில் கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் பணிக்கு வருகைதரும் நேரத்தையும், பணியை முடித்து வெளியேறும் நேரத்தையும் உறுதிப்படுத்த கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை பயன்படுத்தப்படவுள்ளது.

அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள மற்றும் கூட்டுத்தாபன பிரதானிகளுக்கும் இதற்கான விசேட சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களில் கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துமாறு இதற்கு முன்னர் அறிவித்திருந்தபோதும், உரிய முறையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. சில அரச நிறுவனங்களில் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த நிலையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் கைவிரல் அடையாள பதிவு முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் சுற்றுநிரூபம் ஊடாக மீண்டும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435