இம்மாதம் 16ம் திகதி தொடக்கம் அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றும் நிறைவேற்று அதிகாரிகள் 35,000 பேர் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினை உட்பட 5 கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் பொதுமக்களின் அத்தியவசிய தேவைகளை கருத்திற்கொண்டு செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்தார்.