இலங்கையி்ல் உள்ள அரச பாடசாலைகளில் மொத்தமாக 2 இலட்சத்து 26 ஆயிரத்து 983 ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி போதனைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இவர்களில் 63 ஆயிரத்து 123 பேர் (28%) ஆண்களாகவும் 1 இலட்சத்து 63 ஆயிரத்து 860 பேர் (72%) பெண்களாகளாவர்.
மொத்த ஆசிரியர்களில் 90 ஆயிரத்து 515 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும் 1 இலட்சத்து 29 ஆயிரத்து 686 பேர் பயிற்றப்பட ஆசிரியர்களாகவும் 4 ஆயிரத்து 388 பேர் பயிற்சியற்ற ஆசிரியர்களாகவும் 2 ஆயிரத்து 394 பேர் பயிலுநர் ஆசிரியர்களாகவும் உள்ளனர்.
இலங்கைப் பாடசாலை ஆசிரியர்களில் 24 பேர் Ph.D. கல்வித் தரத்திலும் 162 பேர் M.Phil கல்வித் தரத்திலும் 4064 பேர் MA/M.Sc/M.Ed கல்வித் தரங்களிலும் 97,651 பேர் BA/B.Sc/B.Ed கல்வித் தரங்களிலும் 115,661 பேர் G.C.E.A/L கல்வித் தரத்திலும் 9,400 பேர் G.C.E.O/L கல்வித் தரத்திலும் 21 பேர் G.C.E.(O/L) கல்வித் தரத்தை விடவும் குறைந்த தகமையுடையவர்களாகவும் உள்ளனர்.
மாணவர்களின் கல்வி போதனைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் 1461 பேர் ஏனைய நடவடிக்கைகளுக்காக (Released to a Office) விடுவிக்கப்பட்டுள்ளனர். 111 பேர் (On Study Leave) கற்பதற்கான விடுமுறையில் இருக்கின்றனர்.
மொத்த ஆசிரியர்களில் 54,854 பேர் தமிழ் மொழி மூலமும் 4, 085 பேர் ஆங்கில மொழி மூலமும் 1,68,044 பேர் சிங்கள மொழி மூலமும் கல்வி போதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆசிரியர்களில் 25,596 பேர் 21 – 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் 68,412 பேர் 31- 40 வயதுக்குட்பட்டவர்களாகவும் 79,048 பேர் 41 – 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் 34,078பேர் 51–55 வயதுக்குட்பட்டவர்களாகவும் 9,980 பேர் 56–57 வயதுக்குட்பட்டவர்களாகவும் 9,846 பேர் 58-60 வயதுக்குட்பட்டவர்களாகவும் 23பேர் >60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர்.
இவர்களில் 7604 பேர் அதிபர்களாகவும் 2353 பேர் பதில் அதிபர்களாகவும் 4407 பேர் பிரதி அதிபர்களாகவும் 852 பேர் பதில் பிரதி அதிபர்களாகவும் 1680 பேர் உதவி அதிபர்களாகவும் 272 பேர் பதில் உதவி அதிபர்களாகவும் 209,815 பேர் ஆசிரியர்களாகவும் பாடசாலைகளில் கடமையாற்றுகின்றனர்.
மக்கள் விருப்பம்/ வேலைத்தளம்