அரச மருத்துவர்கள் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பு

அரச மருத்துவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் சேவை யாப்பு மற்றும் தரப்படுத்தல்களின் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சிலவற்றிற்கு சுகாதார அமைச்சர் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே எதிர்வரும் வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு அதிகாரிகள் செவிசாய்க்காத பட்சத்தில் அதனை தொடர் போராட்டமாக முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435