மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு அடுத்து வாரத்துக்குள் நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால், தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொது செயலாளர் நவிந்த டி சில்வா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக மருத்துவ சங்கம் முன்வைத்த பரிந்துரைகளுக்கு அனுமதிவழங்க அடுத்த வாரத்துக்குள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதிகள் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவதை ஆறு மாத காலங்களுக்கு இடைநிறுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதுனர்.