அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்இன்று காலை 8 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அந்தச் சங்கத்தின் உதவிச் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினை மற்றும் தமது வேதன பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்;பிட்டுள்ளார்.
தாய்மார் மருத்துவனை, சிறுவர் மருத்துவமனை மற்றும் சிறுநீரக மருத்துவமனை என்பனவற்றில் இந்தப் பணப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படமாட்டாது என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பணிப்புறக்கணிப்பு இடம்பெறும் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப்பிரிவு சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.