எதிர்வரும் நாட்களில் அரச விடுமுறை வழங்கப்படுவதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த தகவல்கள் அடிப்படையற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் திடீரென கொரோன வைரஸ் நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுவதன் காரணமாக அரசு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் பரப்பப்படுகின்ற நிலையிலேயே அரசாங்க தகவல் திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.