அவமானப்படுத்தப்பட்ட அதிபருக்கு நியாயம் வேண்டும்

பதுளை தமிழ் பாடசாலை அதிபர் ஒருவரை முழந்தாளிடச் செய்த ஊவா முதலமைச்சர் மற்றும் கல்வியமைச்சராக சாமர சம்பத் தசாநாயக்கவை அரசியலில் இருந்து நீக்குமாறு தமிழ் ஆசிரியர் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் ஆசிரியர்களை பெரும்பான்மை அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக அடக்கியாள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன் உச்ச கட்டமே இச்செயற்பாடு. கற்பிக்கும் குருமார்களை கையெடுத்து கும்பிடவேண்டும் என்ற நிலை மாறி இவ்வாறு அவமானப்படுத்துவது காட்டுமிராண்டித்தனமாகும். சாமர சம்பத் போன்ற அரசியல்வாதிகள் அரசியல் அரங்கில் இருந்து வௌியேற்றப்படவேண்டும். கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்திற்கேற்ப செயற்பட்ட அதிபரை இவ்வாறு அவமானப்படுத்தியமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஊவா முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதிபர் ஆசிரியர்கள் எந்தவொரு அரசியல்வாதியையும் மதிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட அதிபரிடம் ஊவா முதலமைச்சர் உடனடியாக மன்னிப்பு கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவரை பதுளையில் உள்ள தமிழ் வித்தியாலயத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு அதன் அதிபருக்கு தான் வழங்கிய ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாததனால், அதிபரை வீட்டுக்கு அழைத்து முழந்தாளிடச் செய்து அவமானப்படுத்தியதாக ஊவா முதலமைச்சர் மீது குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435