ஆசிரியர்களுக்கான திறந்த போட்டிப்பரீட்சை

நாடு முழுவதும் உள்ள தேசிய பாடசாலைகளில் உள்ள க.பொ.த உயர்தர சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில பிரிவுகளுக்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2017 எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ளது.

தரம் 3 -1 (அ) இற்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்காக இப்பரீட்சையை கொழும்பில் நடத்துவற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பரீட்சை ஆணையாளர் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

திறந்த போட்டிப்பரீட்சையில் தோற்றுவதற்கு 1275 பேர் விண்ணப்பித்துள்ளனர். கொழும்பில் உள்ள 73 மத்திய நிலையங்களில் பரீட்சை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி பத்திரம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பரீட்சை அனுமதி பத்திரம் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு கீழ் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களினூடாக பரீட்சை திணைக்கள ஏற்பாட்டுக்குழு மற்றும் வௌிநாட்டு பரீட்சை கிளை என்பவற்றை தொடர்புகொள்ளலாம் என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி இலக்கங்கள் – 0112785230/0112177075 அல்லது 0112786200,2784201,2785202,2784203,2784204,2786205,2784206,2787207/ 275,401,413
உடனடி தொடர்பு – 1911 ( 24 மணி நேரம்)

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435