ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கும் வடமாகாண சபை தீர்மானம்

பதில் அதிபர்கள் கடமையாற்றும் பாடசாலைகளுக்கு அதிபர் சேவையில் சித்தி பெற்ற அதிபர்களை நியமிப்பதற்கு எதிராக வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

இலங்கை அதிபர் சேவை யாப்பின்படி அதிபர் சேவைக்கு பரீட்சை மூலம் 3,822 பேர் தெரிவு செய்யப்பட்டு கடந்த 9 ஆம் திகதி முதல் ஜூன் 17 ஆம் திகதி வரை பயிற்சியளிக்கப்படுகிறது.

இதில் சுமார் 300 பேர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள். பதில் ஆசிரியர்கள் கடமையிலுள்ள பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்களை நியமிக்கவே இந்த 300 பேருக்கும் பயிற்சியளிக்கப்படுகின்றது என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வீரகேசரி வார வெளியீட்டுக்கு தெரிவித்தார்.
வடமாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானம் இந்த அதிபர் பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்துள்ளது.
இவ்விடயம் குறித்து எமது சங்கம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசி­ரியர் சங்கம் வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் விளக்க கடிதமொன்றையும் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலைத்தளம்

மூலம்- வீரகேசரி- எஸ். கணேசன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435