ஆசிரியர்கள் குறித்து முறைப்பாடு

தம்மால் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்கு வருமாறு மாணவர்களுக்கும், மாணவர்களை அந்த வகுப்புகளுக்கு அனுப்புமாறு பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கும் 31 ஆசிரியர்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இருந்து இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தமது மேலதிக வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்கள் பாடசாலைகளில் பல்வேறு வகையில் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக குறித்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டி , ஹொரணை , களுத்துறை , ஹம்பாந்தோட்டை , மாத்தறை , கெகிராவை , இரத்தினபுரி மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களை சேர்ந்த 25 ஆசிரியர்களுக்கு எதிராகவும், 6 தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு எதிராகவும் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், கல்வி அமைச்சின் 1988 என்ற அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு இது போன்ற சம்பவங்கள் தொடர்பில் பெற்றோர்கள் முறைப்பாட்டுக்களை பதிவு செய்ய முடியும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435