ஆசிரியர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆசிரியர், மாணவர் தொடர்பு குறித்தும், ஆசிரியர்களின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், அநீதிகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி என்ற வகையில் தனக்கு வரும் கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சில கலந்துரையாடல்களின் போது தெரிவிக்கப்படும் விடயங்களில் இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இவை குறித்து அதிகாரிகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பிங்கிரிய வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி விஞ்ஞான பீடத்தில் நேற்று (23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஆசிரியர் தொழிலை ஒரு உன்னதமான பணியாக கருதிய அன்றைய யுகத்திற்கும், ஆசிரியர் தொழிலை தொழிலாக மட்டுமே கருதுகின்ற இன்றைய யுகத்திற்குமுள்ள வேறுபாடு குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, ஆசிரியர் தொழில் என்பது தேசத்தை கட்டியெழுப்புகின்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு தொழிலுக்கும் இரண்டாம் பட்சமாக கருத முடியாத உன்னதமான தொழிலாகும் என்று தெரிவித்தார்.

இன்று ஆசிரியர் சேவையிலுள்ள 250,000க்கும் மேற்பட்டவர்களிடையே அந்த உன்னதமான தொழிலுக்கு பொருத்தமற்ற எட்டு அல்லது ஒன்பது வீதமானவர்கள் இருப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அது கல்வித் தகைமைகளுக்கேற்ற வகையில் அல்லாது தமது சேவையின் மீது இருக்கும் மதிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறன்கள் மீது காட்டும் பலவீனத்தின் அடிப்படையிலாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் தொழிலிலும் அரசாங்க சேவையிலும் அரசியல் துறையிலும் உள்ள இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

எந்தவொரு துறையினதும் அங்கீகாரமும் கௌரவமும் பாதுகாக்கப்படுவது அந்தத் துறையில் இருக்கின்றவர்கள் சமூகத்திற்கு வழங்கும் பண்பாடு மற்றும் முன்மாதிரியின் மூலமேயாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435