ஆசிரியர் உதவியாளர்கள் 391 பேருக்கு நிரந்தர நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்குட்பட்ட 391 மலையக ஆசிரியர் உதவியாளர்கள் உள்ளிட்ட 417 பேருக்கு நேற்று முன்தினம் (16) நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தலைமையில் இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள குமார வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள மலையகப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 391 ஆசிரியர் உதவியாளர்களும் இதில் அடங்குகின்றனர்.

அத்துடன், 26 உதவி தர்மாசிரியர்களுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435