ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப்பரீட்சை பிற்போடப்படலாம்…

நாளை (10) கொழும்பில் நடத்தப்படவிருந்த ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப்பரீட்சையை பிற்போடுமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா கோரியுள்ளார்.

நாட்டில் நிலவும் அவசரகால நிலைமையை கருத்திற்கொண்டு இப்போட்டிப்பரீட்சையை பிற்போடுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் அமைச்சர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அமைச்சரின் கோரிக்கைக்கமைய போட்டிப்பரீட்சையை பிற்போடுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து போட்டிப்பரீட்சைக்கு வரவுள்ள பரீட்சார்த்திகள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என்ற அச்சம் காரணமாக குறித்த கோரிக்கையை அமைச்சர் விடுத்துள்ளார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435