ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க கொள்கை ரீதியான தீர்மானம்

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கொள்கை ரீதியான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆசிரிய இடமாற்றங்களுக்காக சுயாதீனமான முறைமையை அமுல்படுத்தவேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

மாகாண முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (19) நடத்திய சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முறைமை தொடர்பிலும் ஜனாதிபதி வினவியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நிச்சயிக்கப்பட்டவாறு ஒவ்வோர் ஆண்டும் விண்ணப்பம் கோரி, பரீட்சைகளை நடத்தி புதியவர்களை நிர்வாக சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் உள்ளுராட்சி நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்கள் உள்ளிட்ட ஏனைய குறைபாடுகள் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெறும் கூட்டங்களுக்காக உள்ளுராட்சி நிறுவன அலுவலர்களை அழைக்கும் போது, அதற்காக நிச்சயிக்கப்பட்ட திகதிகளை ஒதுக்குவது தொடர்பில் அமைச்சரவையை தெளிவூட்டி தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435