ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மாற்றுவழி அவசியம்

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு விசேட மாற்றுத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன சபையில் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலாளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறிப்பாக பாடசாலைகளில் விஞ்ஞான ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், ஏற்கனவே அதிக எண்ணிக்கையான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் 2100 ஏற்கனவே நேர்முகத்தேர்விற்கு தோற்றியுள்ளனர் என்றும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான மாற்றுவழிகளுக்கு செல்வவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435