சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கடந்த மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இதற்காக 10 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் மஹிந்த சனத் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றிடங்கள் 630ஐ நிரப்புவதற்காக இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்;பட்டுள்ளன.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பாடநெறிகளுக்கான ஆட்சேர்ப்பை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மேற்கொள்ள உள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் மஹிந்த சனத் வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.