ஆசிரிய ஆலோசகர் சேவைக்கு விரைவில் 4,471 பேர் இணைக்கப்படுவர்!

இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு 4,471 பேரை இணைத்துக்கொள்ள முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

நீண்ட கால கோரிக்கைக்கமைய ஆசிரியர் ஆலோசகர் சேவை ஸ்தாபிக்கப்பட்டு, அச்சேவைக்கான யாப்புக்கு கொள்கைரீதியான அனுமதி கோரி அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசமுடைய வழிகாட்டலில் இவ்யாப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,

கல்வியின் தரத்தை மேம்படுத்துவதுடன் பாட விதானங்களை நவீனமயப்படுத்துதல் மற்றும் கற்பித்தல் முறையினை ஒழுங்குபடுத்தல் ஆகிய நோக்கங்களுக்கு ஆசிரியர் ஆலோசகர்கள் பங்களிப்பு வழங்கவுள்ளனர்.

1960ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை ஆசிரியர் ஆலோசகர் சேவை காணப்படுகிறது. இந்நிலையில் 2007ம் ஆண்டு தொடக்கம் இச்சேவையை வேறான சேவையாக ஸ்தாபிக்குமாறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இச்சேவையின் முக்கியத்துவத்தை அடையாளங்கண்ட கல்வியமைச்சர் கடந்த 2016ம் ஆண்டு தொடக்கம் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொண்ட முயற்சியினால் இச்சேவை தனியான சேவையாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவைக்கான சம்பள திட்டங்களை உருவாக்குவதள்கு தேசிய சம்பள மற்றும் ஊழியர் தொகைக்கணக்கீட்டு ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு என்பன அனுமதியை வழங்கியுள்ளன.

அமைச்சரவ அனுமதி வழங்கப்பட்ட பின்னர் ஆசிரியர் ஆலோசகர் தேசிய மட்டத்தில் முறையாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள். நிறைவான சேவைப் பங்களிப்பை பாடசாலை கட்டமைப்பில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் விரைவாக குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்விமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம் – அததெரண/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435