மலையகத்தில் உள்ள ஆசிரியர் உதவியாளர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு சென்று பயிற்சி பெறுவதில் இருந்த இழுப்பறி நிலைக்கு சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் தலையீட்டினால் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆசியரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி வழங்கி நிரந்தர நியமனம் வழங்குவது என்பது இந்நியமனத்தின் பிரதான நிபந்தனை. எனினும் வர்த்தமானி அறிவித்தலின் படி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சிக்கு விண்ணப்பித்த குறித்த ஆசிரியர் உதவியாளர்களை விடுவிக்க வேண்டாம் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளதாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆசிரிய உதவியாளர்கள் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்து தமது பிரச்சினையை பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் அனுமதியை பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.