ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளாக பார்க்காதீர்கள்- அமைப்புகள்

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து சென்ற விதம் குறித்து தொழிலாளர் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் கவலை வௌியிட்டுள்ளன.

“ஊடகங்கள் அவர்களை குற்றவாளிகளாக்கியுள்ளன, அதற்கேற்றாற் போல் அவர்கள் குற்றவாளிகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள்” என்று தாபிந்து கூட்டிணைவு அமைப்பின் சமிலா துஷாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் தங்கியுள்ள தங்குமிடங்களுக்கு சென்ற இராணுவத்தினர் 5-10 நிமிடங்களில் தமது உடமைகளை எடுத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறுமாறு உத்தரவிடுகின்றனர். தாம் எங்கு அழைத்து செல்லப்படப்போகிறோம் என அவர்களுக்குத் தெரியாது. பொது சுகாதார அதிகாரிகள் யாரும் அவ்விடத்தில் இருக்கவில்லை. அவர்கள் முகக்கவசங்களை அணிந்திருக்கவில்லை. சிலர் குழந்தைகளை வைத்துள்ளனர். ஒரு பஸ்ஸில் இருந்து இன்னொரு பஸ்ஸுக்கு மாற்றப்படுகிறார்கள் இதனால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாகவே காணப்படுகிறது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் ஏன் இவ்வாறு பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் சமிலா கேள்வியெழுப்பியுள்ளார்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மிகச் சிறிய அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அறையில் இரண்டு மூன்று பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 50 – 100 பேர் ஒரே மலசலகூடத்தை பயன்படுத்துகின்றனர். இதேவேளை, தொழிற்சாலையின் உயரதிகாரிகள் நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்னர். அவர்கள் செப்டெம்பர் மாதம் தொடர்ச்சியாக பணியாற்றினர். அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. இந்த பிரச்சினை தொடர்பாக ஆதாரங்கள், இந்தியாவின் நிலைமை மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகியவற்றை அறிய விரும்புகிறோம்.

இவர்கள் ஒதுக்கப்பட தகுதியானவர்கள் இல்லை. இவர்களினால் நேரடியாக நாட்டுக்கு பெருந்தொகையான அந்நிய செலாவணி பெறப்படுகிறது. எனவே, அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை குற்றஞ்சாட்டுவதை உடனடியாக நிறுத்தவேண்டும் முதலீட்டுச்சபை, தொழில் திணைக்களம் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இந்ந நிலைமைக்கு உடனடியாக பொறுப்பு கூற வேண்டும் என்றும் சமிலா துஷாரி சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த, இலங்கை வணிக, தொழில்துறை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சில்வெஸ்டர் ஜயகொடி, நிறுவனங்கள் அவர்கள் பெற்ற லாபத்திலிருந்து என்ன செய்து கொண்டிருக்கின்றன. “அவர்கள் ஜி.எஸ்.பி லாபம், முதலீடுகள் போன்றவற்றைப் பெறுகிறார்கள், ஆனால் இந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கத் தவறிவிட்டனர். இந்த பெண்கள் ஒரு சிறிய பணியில் ஈடுபடுகிறார்கள், அவர்களின் வேலை நேரத்தை மேலும் நீட்டிக்க முடியுமா என்பது குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என கவலை வௌியிட்டார்.

எவ்வாறாயினும், சர்வதேச தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றவும், இந்த ஏழை ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசாங்கத்திடம் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் பிரியலால் சிறிசேன தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435