வௌிநாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தலை தடுப்பதற்கு விசேட திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அமைந்துள்ள வௌிநாட்டு வேலைவாப்பு பணியகத்தின் பிரிவின் பலப்படுத்தி கூடுதல் அதிகாரங்களை வழங்கவுள்ளோம். வௌிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஆட்கடத்தில் இடம்பெறுவதாக பணியகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் விமானநிலையத்தில் உள்ள பணியக அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி கருத்தை வௌியிட்டார்.
வேலைத்தளம்