பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி ஆயிரம் ரூபா இயக்கம் ஆர்ப்பாட்டமொன்றை பொகவந்தலாவில் நடத்தியது.
இன்று (03) நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரம் ரூபா இயக்கம் மற்றும் சிவில் அமைப்புகள், உள்ளடங்களாக 200கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் கலந்து கொண்டனர். தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற பட்சத்தில் ஆயிரம் ரூபா இயக்கமாகிய நாங்கள் நாடளாவிய ரீதியில் ஆர்பாட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். பொகவந்தலாவ நகரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டாம் என்று கோரி நீதிமன்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் தோட்ட தொழிலாளர்களுடைய ஆயிரம் ரூபா ஆர்பாட்டத்திற்க்கு எந்த தடைகள் வந்தாலும் நாங்கள் அஞ்சப்போதில்லை நாங்கள் கேட்பதல்லாம் எங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் இன்றைய காலகட்டத்தில் இந்த 750ருபா சம்பளம் போதாது. மலையக அரசியல்வாதிகள் வெறுமனே 50ருபாவிற்கும் தோட்ட தொழிலாளர்களின் 750 சம்பளத்திற்கும் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்து விட்டனர்
தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கினாலும் போதாது என கண்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அமைச்சர்
சஜித்பிரமேதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில் வழங்கப்பட்டுள்ள 750 ரூபா சம்பளத்தைக் கொண்டு மலையக மக்கள் எவ்வாறு வாழ முடியும்.
நாங்கள் கோறுவது எல்லாம் எங்கள் தாய் தந்தையர்களுக்கு ஆயிரம் ருபா சம்பளம் வழங்கபட வேண்டும். நாங்கள் மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகளை
போன்று தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயத்தினை வைத்து கொண்டு அரசியல் செய்யவில்லை இந்த நாட்டில் வாழும் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்று தருமாறுதான் நாங்கள் கோருகிறோம். எமது ஆர்ப்பாட்டம் பொகவந்தலாவையோடு நின்றுவிடாது. தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா கிடைக்கும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.