ஆயிரம் ரூபா சம்பள விவகாரம்- ஹட்டனில் போராட்டம்

கூட்டு ஒப்பந்தம் ஊடாக தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி பெருந்;தோட்டத் தொழிலாளர்களும், அவர்களுக்கு ஆதரவான தரப்பினர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய, ஆயிரம் ரூபாய் இயக்கம் அதனுடன் இணைத்துள்ள 30இற்கும் உட்பட்ட சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஹட்டனில் எதிர்ப்பு பேரணியும், ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நேற்று (17) நடத்தின.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும். மாறாக தொழிலாளர்களின் வயிற்றில் அரசாங்கமும் அடிக்க கூடாது என வழியுறுத்தியும் கூட்டு ஒப்பந்தம் ஊடாக உயர்த்தப்பட்டுள்ள சம்பளம் ஒரு ஏமாற்று நடவடிக்கை என்றும் அதற்கு பாரிய எதிர்ப்பினை தெரிவித்தும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஹட்டன் மல்லியப்பு சந்தியில் மக்கள் எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஹட்டன் நகரின் மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் வந்தடைந்த பேரணியில் கலந்து கொண்டோர். அங்கு பலத்த எதிர்ப்பினை கோஷங்கள் எழுப்பி வெளிக்காட்டியதுடன் பதாதைகளுடனும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்த அடிப்படை வேதனமாக ஆயிரம் ரூபாயை கோரிக்கையாக முன்வைத்து போராடிய போதும், அவர்களுக்கு வெறுமனே 20 ரூபாவை வழங்கி ஒப்பந்தம் செய்து ஏமாற்றியுள்ளனர் என்று போராட்டக்காரர்கள்; குற்றம் சுமததினர்.

ஏமாற்றப்பட்டுள்ள தொழலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து ஆயிரம் ரூபாவை பெற்று தருவதாக ஏமாற்றி இம்முறையும் ஏமாற்றத்திற்கும் துரோகத்திற்கும் தொழிலாளர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 750 ரூயாய்க்கு மேலாக 140 ரூபாயை பெற்றுதருவதாக கூறியவர்களும் ஏமாற்றிவிட்டனர். இவ்வாறு தொழிலாளர்களை தொடர்ந்து ஏமாற்றுவதை எதிர்த்து இந்த ஆர்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435