ஆயுர்வேத மருத்துவமனைகளில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நீக்குவதற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார, சுதேசவைத்தியத்துறை, பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி கோரியுள்ளார்.
அண்மையில், சுகாதார அமைச்சில் நடைபெற்ற மாகாண ஆணையாளர்கள், தேசிய வைத்தியத்துறை அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இக்கலந்துரையாடலின் போது ஆளணி பற்றாக்குறை, நிதி, உத்தியோகப்பூர்வ இல்லங்கள் குறித்த பிரச்சினைகள், ஆட்சேர்ப்பு, சேவை நியமனக்குறிப்பை தயாரித்தல், இடமாற்றம் உட்பட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
ஆயுர்வேத வைத்திய தாதிகள், ஆய்வுகூட உதவியாளர்கள், மருந்தாளர்கள் ஆகிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
வேலைத்தளம்