கிழக்கு மாகாண பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் ஆரம்ப கல்வி ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஆரம்பகல்வியில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தனது மகஜரில் சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சித் தலைவர், மேலும் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக கொண்டு செல்வதில் அதிபர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.