ஆறுமுகனும், நவீனும் இணைந்தே 50ரூபாவை இல்லாமல் செய்தனர்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும் இணைந்தே 50 ரூபாவை இல்லாமல் செய்தனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்இ முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் விசேட கூட்டம்  01.03.2020  அன்று அட்டன் டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமையேற்று உரையாற்றிய திகாம்பரம் மேலும் கூறியதாவது,

அன்று தை பிறந்தால் வழி பிறக்கும் எனச் சொன்னார்கள். அதன் பின்னர் மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா கிடைப்பது உறுதி என்றார்கள். ஆனால் ஏப்ரல் 10 ஆம் திகதியே அது கிடைக்கும் என இன்று அறிவிக்கின்றார்கள்.

ஆயிரம் ரூபா  தொடர்பில் கடந்த காலங்களில் எவ்வித கருத்தையும் முன்வைக்காமல் நான் மௌனம் காத்தேன். எதாவது கதைத்திருந்தால் திகாம்பரம்தான் அதனை தடுத்துவிட்டார் என துள்ளி குதித்திருப்பார்கள். எனினும், தற்போது அது பற்றி கதைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது  750 ரூபா வழங்கப்பட்டுவரும் நிலையில் அதனுடன் மேலும் 250 ரூபாவை சேர்த்து நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுத்தால், நாம் வரவேற்போம்.

எனினும், கொழுந்து அதிகமாக எடுக்க வேண்டும், 75 வீத கட்டாய வரவு இருக்க வேண்டும் என்றெல்லாம்  நிபந்தனைகளை விதித்தும், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றையும் சம்பளத்துடன் சேர்த்துக்காட்டி எப்படியும் ஆயிரம் என்ற முடிவு எடுக்கப்படுமானால் அதனை ஏற்கமுடியாது. தொழிலாளர்களும் ஏற்கமாட்டார்கள்.

அதேவேளை, 50 ரூபாவையே வாங்கிக்கொடுக்க முடியாத திகாம்பரத்துக்கு ஆயிரம் ரூபா பற்றி கதைப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை என சிலர் விமர்சிக்கின்றனர்.

50 ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு முழு வீச்சுடன் செயற்பட்டேன். நிதி அமைச்சிலிருந்து அதற்கான நிதி பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்டது. எனினும், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும்,  முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும் இணைந்து 50 ரூபாவை இல்லாமல் செய்தனர்.

50 ரூபா தொழிலாளர்களுக்கு கிடைத்துவிட்டால் திகாம்பரத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிவிடும் என்ற அச்சத்தாலேயே நுவரெலியா மாவட்டத்திலுள்ள இவர்கள் இருவரும் அவ்வாறு செய்தனர்  என்று  முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435