நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள ஊழியர்கள் மேற்ககொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 6 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளன.
இரண்டு தினங்களாக மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட் டம் காரணமாக ஆறு இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் பிரதான தபால் நிலையங்களில் தேங்கியுள்ளன. 14 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தற் போதைக்கு ஆறு இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் கொழும்பு பிரதான தபால் நிலையத்தில் தேங்கியுள்ளன. இதன் காரணமாக தபால் திணைக்களத்தின் அன்றாட அலுவல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தபால் திணைக்கள ஊழியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களும் தோல்வியடைந்துள்ளன.
இது தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் சிந்தக்க பண்டார குறிப்பிடுகையில்,
தற்போது நாடெங்கிலிலுமுள்ள தபால் திணைக்களத்தில் சுமார் இரண்டாயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவற்றை ஏனைய ஊழியர்களின் மேலதிக நேர வேலைகளின் ஊடாகவே பூர்த்தி செய்து கொள்ள நேரிட்டுள்ளது. அத்தோடு எமது மேலதிக வேலைநேர கொடுப்பனவகளும் இதுவரையிலும் அதிகரிக்கப்படாமலுள்ளன.
இந்நிலையில் தபால் திணைக்கள அதிகாரிகள் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதை விடுத்து, மேலதிக நேரக் கொடுப்பனவை குறைக்க தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நியாயமான தீர்வினை விரையில் வழங்க் கோரியும் அரசாங்கத்தின் பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுரையிலும் எவ்விதமான தீர்க்கமான முடிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் நாடளாவிய ரீதியில்தொழிற்படும் தபால் ஊழியர்களுக்கான சம்பளஅதிகரிப்பானது பலவருடக்காலமாக அதிகரிக்கப்படவில்லை. தபால் திணைக்களத்திற்கு இந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான நியமனங்களும் முறைக்கேடானவை. அரசானது எங்களுக்கான சம்பள அதிகரிப்பினை வெகுவிரைவில்பெற்று தருவதோடு எமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வை பெற்று கொடுக்க வேண்டும். இல்லையேல் தொடர்ந்தும் எமது தொழிற்சங்க போராட்டமானது முன்னெடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் தபால் பணியாளர்களின் பிரச்சினைகள் அமைச்சரவை கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோகன அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த பணியாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிட்டுருந்தார்.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் தபால்சேவையானது நேற்றும் முற்று முழுவதுமாக செயலழிந்ததோடு வெளிநாட்டு மற்றும் பதிவுத்தபால் சேவைகளும் முற்றுமுழுதாக பாதிப்படைந்தமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்/ வீரகேசரி