கிழக்கு இடமாற்றம் தொடர்பில் மேன்முறையிடலாம்

எதிர்வரும் 2018ம் ஆண்டில் இடமாற்றம் பெற்றுள்ள கிழக்கு மாகாண இணைந்த சேவையில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் தமது மேல் முறையீட்டை சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதி பிரதம செயலாளர் ஜே. ஜே. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற பட்டியல் ஏற்கனவே வௌியிடப்பட்டுள்ள நிலையில், ஆட்சேபனைகள் இருப்பின் மேல்முறையீடு செய்யலாம் என்று பிரதி பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்விடமாற்றங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும்.

ஏற்கனவே கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு, இடமாற்ற சபையின் சிபாரிக்கமைய இவ்விடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட திகதிக்குள் கிடைக்கப்பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் பிரதி பிரதம செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435