தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்று (04) 12.30 மணியளவில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளத்திற்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வில் முடிவடைந்துள்ளது.
தொழில் அமைச்சில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக 720 ரூபாவை வழங்கவே முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளதாகவும் இதற்கு தொழிலாளர் சம்மேளனம் இணங்காத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நாளை (05) மீண்டும் நடைபெறவுள்ளது.
தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் பல பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்/ நன்றி- சனத் சுடர்