இத்தாலியின் எம்.எஸ். சீ மெக்னிபிக்கா பயணிகள் கப்பலில் இருந்த பணியாளர்களில் ஒருவரான இலங்கையர் அநுர பண்டார ஹேரத் என்பவர் கடற்படையினர் பொறுப்பெடுத்துள்ளனர் என்று இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என்றும் அவரை அழைத்து வருவதற்கான குழுவொன்று அதிகாலை புறபட்டது என்றும் அவர் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அழைத்து வரப்பட்டவர் முழுமையாக தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கபட்டது.
இத்தாலிய பயணிகள் கப்பலான எம்.எஸ்.சீ மெக்னிபிக்காவில் குறித்து கவனம் செலுத்தப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, கடற்படை தளபதியின் பூரண பங்களிப்பில் குறித்து அழைத்து வரப்பட்டார். கொவிட் 19 கட்டுப்படுத்தும் ஜனாதிபதி படையணியின் ஆலோசனைக்கமைய கடற்படை பணியாற்றியது என்றும் குறித்த நபர் பாதுகாப்பாக பூஸா தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்- அரசாங்க தகவல் திணைக்களம்