மலையக பாடசாலைகளுக்கு இந்திய ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என்று கூறி இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் என்பன இணைந்து கல்வியமைச்சின் செயலாளர் மகஜர் ஒன்றை கையளித்துள்ளன.
பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தியாவில் இருந்து 100 பேரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திஸ்ஸ ஹேவாவிதான அண்மையில் தெரிவித்திருந்தார்.
நுவரெலியா, பதுளை, பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான மற்றும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்திய ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.