இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு இலங்கைப் பெண்களை சட்டவிரோதமாக அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 6 பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமானநிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்திய கடவுச்சீட்டுடன் சுற்றுலா வீஸாவினூடாக டுபாய்க்கு இலங்கை பெண்களை அனுப்ப முயன்ற போதே குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண்களிடமிருந்து 6 இந்திய கடவுச்சீட்டுக்களும் 6 இலங்கை கடவுச்சீட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளன. பணியக அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனை செய்யும் போது தப்புவதற்காக இந்திய கடவுச்சீட்டுக்கள் வைத்திருந்ததாக தெரிவித்துள்ள குறித்த பெண்கள். நுவரெலியா, இப்பாகமுவ, பொரளுவெவ, தங்கொட்டுவ, மூதூர், செங்கலடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இவர்களில் மூன்று தமிழ் பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.