மனித கடத்தல்காரர்களுக்கு எதிராக இறுக்கமடையும் சட்டம்

இலங்கையில் மனித கடத்தல்களில் ஈடுபடும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு எதிராக சட்டத்தை இறுக்கமாக்குவதற்கான முயற்சியில் தொடர்பாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களின் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் பிரதி அமைச்சர் மானுஷா நாணயக்கார ஆகியோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

சுற்றறிக்கை மூலம் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய மனித கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

ஒழுக்கக்கேடான முறைகளில் தொழிலாளர் உழைப்பை சுரண்டுதல், பாலியல் சுரண்டல் அல்லது உடல் உறுப்புக்களைப் பெற்றுக்கொள்வது என்பன மனித கடத்தல் சட்டத்தின் கீழ் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் 360 (உ) பிரிவுக்கமைய தண்டனைக்குரிய குற்றமாகும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மனித கடத்தல் பிரிவு ஜனவரி முதல் ஒக்டோபர் 2018 வரையிலான காலப்பகுதியில், 29 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது.

அவற்றில் 12 முறைப்பாடுகள் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பிற 15 முறைப்பாடுகள் சட்ட நடவடிக்கைகக்காக பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு அனுப்பப்பட்டது மற்றும் இரண்டு முறைப்பாடுகள் இணக்கப்பாட்டு பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435