இந்திய மீனவர்களால் 840 கோடி நட்டம்

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதால் இலங்கைக்கு வருடத்துக்கு 840 ​கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வருடத்திற்கு 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கின்றனர் என்றும் இதற்கு பின்னர் கைது செய்யப்படும் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன அரசுடமையாக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினால் வடக்கில் சுமார் 50,000 மீனவக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது அந்நாட்டு பிரதமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தபபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435