
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக தொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி பிற்போடப்பட்டுள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தையில் தொழில் அமைச்சர், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டிருந்தன.
இதன்போது எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொழிற்சங்கங்களுடனும், முதலாளிமார் சம்மேளனத்துடனும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட உள்ளதாக தொழில் அமைச்சர் ரவிந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.