வதந்திகளை நம்பி ஏமாறாமல் அனைத்து பட்டதாரிகளும் கடந்த 2005 மற்றும் 2012ம் ஆண்டு காலப்பகுதியில் ஒன்றிணைந்து போராடியது போன்றே போராட முன்வரவேண்டும் என்று வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் தமது நிலைப்பாடு குறித்து விளக்கமளித்துள்ளதுடன் 2019 ஆண்டு அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்குமாறே கோரியிருந்தோம்.
இதன்போது விளக்கமளித்த அமைச்சின் செயலாளர், தற்போதுள்ள 20000 அபிவிருத்தி அதிகாரிகள் நியமனங்களில் கடந்த ஓகஸ்ட் மாதம் 28 திகதி 4667 வெற்றிடங்கள் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வெற்றிடங்களுக்கு செப்டெம்பர் 16ம் திகதியளவில் ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கடந்த காலங்களில் அழுத்தம் செலுத்தப்பட்ட பயிற்சி பெற்ற திட்ட அதிகாரிகள் பதவிகளுக்கும் 10000 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் 31.12.2018ம் ஆண்டு வரை பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அனைத்து பட்டதாரிகளுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படும் என்றும் எதிர்காலத்தில் ஏனைய பட்டதாரிகளுக்கு பயிற்சி பெற்ற திட்ட அதிகாரி பதவிகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் மாகாண ஆளுநர்களை சந்தித்திது மாகாண ரீதியில் ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொள்வதற்கான போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் மாவட்ட மட்டங்களில் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களை சந்தித்து தொழில் வழங்க முன்வருமாறு கோரியுள்ளதாகவும் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெகு விரைவில் தம்மை இணைத்துக்கொள்ளுமாறும் ஆசிரியர் ஆலோசகர் நியமனங்களை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறும் கடிதம் மூலமாக கல்வியமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
உறுதியளித்தாற்போல் இம்மாதம் 9ம் திகதிக்கு முன்னர் நியமனம் வழங்கப்படாவிடின் மாகாண, மாவட்ட ரீதியாக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மூலம்- ஶ்ரீபுவத்