ரயில் இயந்திர சாரதி உதவியாளர்களை சேவைக்கு உள்வாங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயில் இயந்திர சாரதிகள் நேற்று (06) நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தகவல் வழங்கியுள்ளார்.
ரயில் இயந்திர சாரதி உதவியாளர்களை உள்வாங்கும் முறைமை தொடர்பில் எமது சங்கத்தினர் தொடர்ந்தும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றோம்.
சில சந்தர்ப்பங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முன்னெடுத்தோம்.
கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், ரயில் இயந்திர சாரதி உதவியாளர்களை சேவைக்கு உள்வாங்கும் முறைமை தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அந்தக் குழுவின் தீர்மானம் வெளிவருவதற்கு முன்னதாகவே, ரயில்வேதுறை அதிகாரிகள், ரயில் இயந்திர சாரதி உதவியாளர்களை சேவைக்கு உள்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நள்ளிரவு முதல் ரயில் இயந்திர இயக்கப் பணிகளில் இருந்து விலகியிருக்க தீர்மானிதுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.
இந்தப் பணிப் புறக்கணிப்பின் காரணமாக 300 இற்கும் அதிகமான ரயில் சேவைகள் இரத்தாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.