இரண்டாம் மொழி ஆசிரியர் பயிற்சியாளருக்கான நேர்முகத்தேர்வு

இரண்டாம் மொழி ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான எழுத்துமூல பரீட்சையும் நேர்முகத்தேர்வும் நாளை (10) நடைபெறவுள்ளது.

மாகும்புர, பன்னிபிட்டியவில் அமைந்துள்ள தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலை 10.30 மணிக்கு மேற்படி பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.

குறித்த பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை தொழிற்தகமைச்சார் சான்றிதழ்களின் மூலப்பிரதிகள், மற்றும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்துடன் சமூகமளிக்குமாறு கோரப்படுகிறீர்கள்.

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் மொழிக்கல்வி ஆசிரியர்களை நியமிக்கும் நோக்கில் மொழிவளம் மிக்கவர்களை தெரிவு செய்து நியமனம் வழங்கும் நோக்கில் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு 011 309 2903 அல்லது 011 217 2723 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435