இரண்டு நாட்களுக்கு ஒரு பனிஸ்: குவைத்தில் சித்திரவதை அனுபவித்த சுலோச்சனா

 

குவைத்துக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்று பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்த சுலோச்சனா கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

 

குறித்த பெண் எஹெலியகொட பிரசேத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தயான 49 வயதுடைய மாரிமுத்து சுலோசனா என்பவராவார்.

அவர் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் அவர்களின் திருமண செலவிற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதற்காக குவைத்திற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குவைத் நாட்டில் சாரா என்ற பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கே அவர் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். அங்கு குறித்த ஆசிரியரின் மனைவியால் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை பனிஸ் மாத்திரமே உணவாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான  சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

கூடிய பசி  ஏற்படும் பட்சத்தில் மேலதிகமாக உணவு கேட்கும் போது குறித்த பெண் வீட்டு பெண் தன்னை பாதணிகளால் தாக்கியதாகவும், அவ்வாறு தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் தனது உடலில் உள்ளதாகவும் சுலோச்சனா கூறுகிறார்.

மூன்று மாதங்கள் நிறைவடைந்தும் சித்திரவதைகள் தொடர்ந்ததால், சுலோச்சனா தான் பணிபுரிந்து வந்த வீட்டாருக்கு தெரியாமல் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு தப்பிச் சென்று தஞ்சமடைந்துள்ளார்.

அதன் பின்னர் சுலோச்சனாவை சித்திரவதைக்கு உட்படுத்திய குறித்த பெண்ணும் அவரது கணவரான ஆசிரியரும் இலங்கை தூதரகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வீட்டு உரிமையாளர்கள் உறுதியளித்தன் பின்னர் முறையாக உணவு , சம்பளம் என்பவற்றை வழங்குமாறு கூறி தூதரகம் மீண்டும் சுலோசனாவை  அவர்களுடனேயே அனுப்பி வைத்துள்ளது.

எனினும் சுலோச்சனாவை அழைத்துச் சென்ற குறித்த ஆசிரியரும் அவரது மனைவியும் மீண்டும் தப்பிச் செல்லாதவாறு அறையொன்றில் அடைத்து முன்னரைப் போலவே இரு தினங்களுக்கு ஒரு தடவை பனிஸ் மாத்திரம் வழங்கி துன்புறுத்தியுள்ளனர்.

சுலோச்சனா தனது மாத சம்பளம் குறித்து வீட்டு உரிமையாளர்களிடம் கேட்ட போது , அவரை தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். இவ்வாறு பல துன்புறுத்தல்களுக்கு உள்ளான சுலோச்சனா ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில்  நாடு திரும்பினார்.

நாடு திரும்புவதற்கு முன்னர்  இரு வருடத்திற்கான ஊதியம் குறித்து குவைத் விமான நிலையத்தில் வைத்து வீட்டு உரிமையாளர்களிடம் வினாவிய போது , ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக முறையாக உணவு உற்கொள்ளததால் சுலோசனா உடல் மெலிந்து வலிமையிழந்து இருப்பதோடு, இலங்கை வருவதற்கு முன்னர் டுபாய் விமான நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு குவைத்தில் பல சித்திரவதைகளை அனுபவித்து உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சுலோச்சனா நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுலோச்சனாவிற்கு வேதனத்தை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435