ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்காள ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீது இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
நேற்று (11) தொடக்கம் இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலங்கையின் உற்பத்தி பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு இலகுவில் ஏற்றுமதி செய்து கொள்ள முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் கூறியுள்ளார்.
அதன்படி இலங்கையின் ஆடை வகைகள், மீன்கள் உள்ளிட்ட பல பொருட்களை ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதிய செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் உரிமைகளை பாதுகாத்து, இலங்கையில் ஜனநாயகத்த உறுதிப்படுத்துவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பின் பிரதிபலனாக ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர், இது நல்லாட்சி அரசாங்கம் பெற்ற வெற்றி மாத்திரமல்ல எனவும் முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றி எனவும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல, தைத்த ஆடைகள் உட்பட தேசிய உற்பத்திகள் மூலம் மேலும் விரிவாக ஐரோப்பிய சந்தைகளில் மீண்டும் பிரவேசிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதன் காரணமாக பல புதிய தொழில் வாய்ப்புகளும் வாழ்வாதார வழிகளும் நாட்டுக்குள் உருவாகும். ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர்களும், உதவியவர்கள் என பலர் உள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.