இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 10,000ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது.

சற்று முன்னர் 314 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியானதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 55 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

எஞ்சிய 259 பேர் முன்னதாக தொற்று உறுதியான நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 10,105 ஆக அதிகரித்துள்ளது.

4,282 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணம் அடைந்துள்ளனர்.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5,804 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435