மருத்துவர், தாதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க திட்டம்?

அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதிகள் ஓய்வு பெறும் வயது 65 ஆக மாற்றியமைக்க சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

தேசிய அவசியங்களை கருத்திற்கொண்டு மேலே கூறப்பட்ட தொழில்சார் நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்திற்கான பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

எனினும் இவ்வாறு ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கச் செய்யப்படுவதாயின் அது மேலும் பல துறைகளுக்கு தாக்கம் செலுத்தும் என்பதுடன் சமூகத்திற்கு தாக்கம் செலுத்தாத வகையில் அமைக்கப்படவேண்டியதன் அவசியம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435