இலங்கையில் ஹெரோயின் உட்பட பல்வேறு போதை பொருள் பாவனைக்கு சுமார் 17,457 பேர் அடிமையாகியுள்ளார்கள் என்று சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பாராளுமன்றில் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் (20) பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகிள்ளோர் தொடர்பான தொகை மதிப்பீடு உலக சுகாதார அமைப்பினால் நடத்தப்பட்டது. இவர்களில் 13 பேர் எச் ஐ வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர். போதை பொருள் பாவனை மற்றும் எச் ஐ வி தொற்று என்பவற்றை சமூகத்தில் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. போதை பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் சுகாதார அமைச்சின் கீழ் இல்லை என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்