இலங்கையில் தொழில்புரிவோரில் 63.5 சதவீதமானவர்கள், முறைசாரா தொழில் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என சர்வதேச தொழிலாளர் ஒழுங்கமைப்பின் ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அமைப்பினால் முறைசாரா தொழில் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, முறைசார்ந்த தொழில் பிரிவில் 37.3 சதவீதமானவர்களே உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முறைசாரா தொழில்பிரிவில் உள்ளடக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில், 63.5 சதவீதமானவர்கள் ஆண்களாவர்.
இதேவேளை, விவசாயம் சாராத ஏனைய முறைசாரா தொழில்பிரிவுகளில் 49.2 சதவீதமான இலங்கையர்கள் பணியாற்றுகின்றமையும் தெரியவந்துள்ளது.