இலங்கை கல்வித்துறையில் தரத்தை மேம்படுத்துவதற்காக ‘இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை’ என்ற சேவையை ஸ்தாபிப்பதற்கான அனுமதியை நேற்று (08) அமைச்சரவை வழங்கியுள்ளது.
இலங்கையில் ஆசிரியர் ஆலோசகர் என்ற சேவையானது கடந்த 1962ம் ஆண்டு தொடக்கம் பாடசாலை தொகுதிகளில் செயற்படுத்தப்படுகிறது.
பாடசாலைகளில் ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு இச்சேவை துணை செய்கிறது. எனினும் இதற்கான தனியான பதவி அமைக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் ஆசிரியர் ஆலோசகர் என்று புதிய சேவையை உருவாக்கி தற்போது ஆசிரியர் ஆலோசகர்களாக பணியாற்றுவோரை அச்சேவைக்கு உள்வாங்குவதற்காக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்து கோரிக்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.