இலங்கை தொடர்பில் எச்சரிக்கும் UAE தூதரகம்

இலங்கைக்கு வருவது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கை தூதரகம் அந்நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி இலங்கையின் பலவிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டி தமது உத்தியோகப்பூர்வ டிவிட்டர் கணக்கில் இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியவசிய தேவையைத் தவிர இலங்கைக்கு வருவதை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரித்துள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதரகம், இலங்கைக்கு செல்வதாயின் குடும்பத்துடன் தமது இணையதளத்தில் அல்லது ஸ்மார் செயலியினூடாக Twajudi சேவையில் பதிவு செய்துக்கொள்ளுமாறு அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அவசர நிலைமைகளின் போது +94 112-301-601 அல்லது வௌிவிவகார அமைச்சின் +971 800-444-44 தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

تهيب سفارة دولة الإمارات في كولومبو بمواطني الدولة بعدم السفر إلى سريلانكا إلا في الحالات القصوى والاضطرارية كما تدعو المواطنين التسجيل في خدمة تواجدي والتواصل مع بعثة الدولة في الحالات الطارئة على الرقم التالي 0094112301601

@UAEEmbColombo (@uaeembcolombo1) October 20, 2019

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435