இலங்கையர்கள் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கு செல்ல தற்காலிக தடை

கொரோனா வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை இலங்கை பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு அனுமதி வழங்குவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

திறன் அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இன்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம், அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதை கருத்தில் கொண்டு அந்த நிலைமைய குறிப்பிடத்தக்களவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரையில் இலங்கை பணியாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதை தவிர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் விதித்துள்ள பயணக்கட்டுப்பாட்டு தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435