எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி 15000 பட்டதாரிகள் பொதுத்துறை பணிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர், அவர்களில் ஐந்தாயிரம் பேர் ஆசிரியர்கள் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கடந்த வருடங்களில் கல்வித்துறையில் பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு வர இயலுமாகியது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம், சுரக்ஷா காப்புறுதித் திட்டம், 13 வருட கட்டாயக்கல்வி என்பன மனித வளத்தை மேம்படுத்தும் சிறந்த திட்டங்களாகும். எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது சுமார் 10000 பாடசாலைகளில் 60 வீதமானவைக்கே மின்சார வசதிகள் இருந்தது. இன்று 98 வீத பாடசாலைகளுக்கு மின் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
3,000 நடமாடும் விஞ்ஞானகூடங்கள் பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன, 40,000 மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.