போட்டிப்பரீட்சையில் தோற்றாதவர்களுக்கும் வாய்ப்பா?

இலங்கை வங்கி முகாமைத்துவ உதவியாளர் பதவி ஆட்சேர்ப்புக்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் தோற்றாத 150 பேர் குறித்த துறைசார் அமைச்சரின் தலையீட்டுடன் உள்வாங்குவதற்கு அழுத்தம் செலுத்தி வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இப்போட்டிப்பரீட்சையில் 75,000 பேர் தோற்றியுள்ளனர். அவர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 600 பேருடைய பெயர் விபரங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களம் இலங்கை வங்கிக்கு அனுப்பியுள்ளது.

அவர்களில் தெரிவு செய்யப்பட்ட 200 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் போட்டிப்பரீட்சையில் தோற்றாதவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்று நேர்முகத்தேர்வுக்காக இலங்கை வங்கித் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

லஞ்சம் பெற்று தொழில் வழங்கப்படுகிறதா?

இவ்வெற்றிடத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பணக் கொடுக்கல் வாங்கல் ஒன்று நடைபெற்றுத்தாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பில் இலங்கை வங்கி பொது முகாமையாளரிடம் வினவியபோது குறித்த பெயர் பட்டியல் தலைவரின் அலுவலகத்தில் இருந்தே கிடைக்கப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் தமக்கு எவ்விபரமும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசின் போது இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியுடையவர்கள் தொழில்வாய்ப்பை இழந்த நிலையில் இவ்வரசாங்கத்திலும் சில அரசியல்வாதிகள் மேற்கொள்கின்றனர். குறித்த விடயம் தொடர்பில் போட்டிப்பரீட்சையில் தோற்றி வாய்ப்பிழந்தவர்கள் ஜனாதிபதியிடம் முறையிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காஷ்யப்ப கொதலாவல- Sri Lanka Mirror

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435